alayavalaiyakkam.com

Alaya Valam
Thillai Aalayavalam
Bhuvanagiri Aalayavalam
சிவராத்திரி கோவில் பட்டியல் (தமிழ்)
(அறிவிப்பில் உள்ள வரிசைப்படி)
தில்லை நடராஜர் கோயில் (சிதம்பரம்)
இந்திரன் லிங்கம் (விநாயகர் தேர் அருகில்)
அக்னி லிங்கம் (செந்தில்நாதன் மருத்துவமனை அருகில், மாலைக்கட்டி தெரு)
நிருத்வி லிங்கம் (விழுக்கட்டி பிள்ளையார் கோயிலுக்குள்)
வருண லிங்கம் (உடுப்பி ஹோட்டல் உள்ளே, மேலவீதி)
குபேர லிங்கம் (தில்லைக்காளி கோயில் ஆர்ச் எதிரில், வடக்கு வீதி)
ஆத்மநாதர் கோயில் (குரு நமச்சிவாயர் கோயில், வேங்கான் தெரு)
ஈசான்ய லிங்கம் (16கால் மண்டபம், வடக்கு வீதி முனை)
கமலீஸ்வரர் ஆலயம் (கமலீஸ்வரர் கோயில் தெரு)
உமாபதி சிவம் மடம் (கொத்தங்குடி தோப்பு)
பசுபதேஸ்வரர் கோயில் (அண்ணாமலை நகர்)
உச்சிநாதர் கோயில் (சிவபுரி)
பால்வண்ணநாதர் கோயில் (சிவபுரி பைரவர் கோயில்)
சிவன் கோயில் (உசுப்பூர்)
மத்யந்தனீஸ்வரர் கோயில் (புலிச்சமேடு, சக்தி நகர், அம்மாபேட்டை)
ஸ்ரீ யோகபுரீஸ்வரர் கோயில் (சீனிவாசா மண்டபம் பின்புறம், விபிஷ்ணபுரம்)
திருநாளைப்போவார் ஆலயம் (செங்கட்டான் தெரு)
சிவன் கோயில் (முத்து காமாட்சி அம்மன் – மந்தக்கரை பஸ் ஸ்டாப் எதிரில்)
நந்தனார் மடம் (மந்தக்கரை)
ஸ்ரீ கல்யாண வீரபத்திரர் கோயில் (வீரபத்திரசாமி கோயில் தெரு)
இளமையாக்கினார் திருக்கோயில் (இளமையாக்கினார் கோயில் தெரு)
அனந்தீஸ்வரர் கோயில் (E.B. அருகில்)
மறைஞானசம்பந்தர் குருமூர்த்தம் (சிங்காரத்தோப்பு)
பிரம்மபுரீஸ்வரர் கோயில் (சிங்காரத்தோப்பு, கேஸ் குடோன் அருகில்)
அவதூத சுவாமிகள் அதிஷ்டானம் (குருவைய்யர் தெரு)
ஸ்ரீ விடங்கேஸ்வரர் திருக்கோயில் (தில்லைவிடங்கன்)
ஸ்ரீ இராமநாத ஈஸ்வரர் திருக்கோயில் (பின்னத்தூர்)
வெள்ளியம்பலம் கோயில் (கீழ்புவனகிரி)
ஆத்தீஸ்வரர் கோயில் (வயலாம்பூர், புவனகிரி)
வேதபுரீஸ்வரர் கோயில் (பங்களா, மேல் புவனகிரி)
ஸ்ரீநிருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் (கி.ஆடூர்)

மகா சிவராத்திரி 2026 - திருப்பதிகங்கள் முழுத் தொகுப்பு 🔥 சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய தேவாரத் திருப்பதிகங்கள் மற்றும் YouTube இணைப்புகள்: 1️⃣ முதல் காலம் (மாலை 6:00 - இரவு 9:00) * உண்ணாமுலை உமையாளொடும் 🔗 https://www.youtube.com/results?search_query=உண்ணாமுலை+உமையாளொடும்+சம்பந்தர் * பூவார் மலர் கொண்டு 🔗 https://www.youtube.com/results?search_query=பூவார்+மலர்+கொண்டு+சம்பந்தர் * ஓதிமா மலர்கள் தூவி 🔗 https://www.youtube.com/results?search_query=ஓதிமா+மலர்கள்+தூவி+அப்பர் * வட்டனை மதிசூடியை 🔗 https://www.youtube.com/results?search_query=வட்டனை+மதிசூடியை+அப்பர் * பட்டி ஏறுகந் தேறி 🔗 https://www.youtube.com/results?search_query=பட்டி+ஏறுகந்தேறி+அப்பர் * சிவபுராணம் 🔗 https://www.youtube.com/results?search_query=சிவபுராணம்+மாணிக்கவாசகர் 2️⃣ இரண்டாம் காலம் (இரவு 9:00 - 12:00) * வேற்றாகி விண்ணாகி நின்றாய் 🔗 https://www.youtube.com/results?search_query=வேற்றாகி+விண்ணாகி+நின்றாய்+அப்பர் * 1008 சிவ போற்றிகள் 🔗 https://www.youtube.com/results?search_query=1008+சிவன்+போற்றி 3️⃣ மூன்றாம் காலம் (இரவு 12:00 - 3:00) * புக்க ணைந்து புரிந்து அறிகிலர் 🔗 https://www.youtube.com/results?search_query=புக்கணைந்து+புரிந்தறிகிலர்+அப்பர் * இருநிலனாய்த் தீயாகி நீருமாகி 🔗 https://www.youtube.com/results?search_query=இருநிலனாய்த்+தீயாகி+அப்பர் * வடிவேறு திரிசூலம் தோன்றும் 🔗 https://www.youtube.com/results?search_query=வடிவேறு+திரிசூலம்+தோன்றும் * துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் 🔗 https://www.youtube.com/results?search_query=துஞ்சலும்+துஞ்சல்+இலாத+போழ்தினும் * காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 🔗 https://www.youtube.com/results?search_query=காதலாகி+கசிந்து+கண்ணீர்+மல்கி * சொற்றுணை வேதியன் 🔗 https://www.youtube.com/results?search_query=சொற்றுணை+வேதியன் * மற்றுப் பற்று எனக்கு இன்றி 🔗 https://www.youtube.com/results?search_query=மற்றுப்பற்று+எனக்கின்றி 4️⃣ நான்காம் காலம் (அதிகாலை 3:00 - 6:00) * வான் சொட்ட சொட்ட 🔗 https://www.youtube.com/results?search_query=வான்+சொட்டச்+சொட்ட+அப்பர் * பற்றற்றார் சேர் பழம்பதியை 🔗 https://www.youtube.com/results?search_query=பற்றற்றார்+சேர்+பழம்பதியை * திரு எழுகூற்றிருக்கை 🔗 https://www.youtube.com/results?search_query=திருஎழுகூற்றிருக்கை+சம்பந்தர் * ஓம் நமசிவாய நாமாவளி 🔗 https://www.youtube.com/results?search_query=ஓம்+நமசிவாய+நாமாவளி 🙏 சிவத் தொண்டில்: ஆலய வல இயக்கம் தமிழ்நாடு ஜி 4 டைமண்ட் அடுக்ககம் சிதம்பரம் 608001 93451 88837 🙏 சிவத் தொண்டில்: ஆலய வல இயக்கம் தமிழ்நாடு ஜி 4 டைமண்ட் அடுக்ககம் சிதம்பரம் 608001 93451 88837 ​🙏 சிவத் தொண்டில்: ஆலய வல இயக்கம் தமிழ்நாடு ஜி 4 டைமண்ட் அடுக்ககம் சிதம்பரம் 608001 93451 88837 நன்றி Sathya Murthy Thillai Aalayavalam Bhuvanagiri Aalayavalam
சிவ சக்தி பவுண்டேஷன் பெங்களூரு &சிதம்பரம்
சார்பில் நிறுவனர்
சத்தியமூர்த்தி
பெற்றோர் குப்புசாமி – மஹாலக்ஷ்மி 63 திருமண நாளை முன்னிட்டு
வேங்கான் வீதி
மாணிக்க வாசகர் திருவாசகம் எழுதிய இடத்தில் முற்றோதல் செய்யும் சிவ அடியார்களுக்கு அரண் பணி அறக் கட்டளை
திருவாசகம் புத்தகம் வழங்கப்பட்டது.
சிவ சக்தி பவுண்டேஷன் பெங்களூரு &சிதம்பரம் சார்பில் நிறுவனர் சத்தியமூர்த்தி Sathya Murthy பெற்றோர் குப்புசாமி - மஹாலக்ஷ்மி 63 திருமண நாளை முன்னிட்டு வேங்கான் வீதி மாணிக்க வாசகர் திருவாசகம் எழுதிய இடத்தில் முற்றோதல் செய்யும் சிவ அடியார்களுக்கு அரண் பணி அறக் கட்டளை திருவாசகம் புத்தகம் வழங்கப்பட்டது.
35 ஆண்டுகள் கேரளத்தில் வாசம் செய்த தில்லை #நடராஜர்!!! #சிதம்பரம் ஸ்ரீ #நடராஜப் பெருமான் முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரத்திலிருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிதம்பரம் கொண்டு வரப்பட்டார் என தல வரலாறு கூறுகிறது. முகலாயர் படையெடுப்பின் போது #தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் #தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை #ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம். இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் #மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து #கேரள மாநிலம் #புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் #தில்லை திரும்பினர். தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, #தில்லைவாழ்_அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் #அம்பலப்_புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான். முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம். இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார். இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள். பின்னர் பல நூறு #தில்லைவாழ்_அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை #நடராஜரையும், #சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர். பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து #தில்லை நோக்கி எடுத்து வந்தனர். வரும் வழியில் #திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் #சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு #வைத்தீஸ்வரன்கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள். 1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா #கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது. - Dinamani ------------ இது முற்றிலும் உண்மை. முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர். தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர். கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது. Thillai Sthalam Thillai Kural Senguttuvan Murugaiyan

35 ஆண்டுகள் கேரளத்தில் வாசம் செய்த தில்லை #நடராஜர்!!!

#சிதம்பரம் ஸ்ரீ #நடராஜப் பெருமான் முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரத்திலிருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிதம்பரம் கொண்டு வரப்பட்டார் என தல வரலாறு கூறுகிறது.

முகலாயர் படையெடுப்பின் போது #தில்லைவாழ்அந்தணர்கள் எனப்படும் #தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை #ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.

இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் #மதுரையைநோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து #கேரள மாநிலம் #புளியங்குடிஎன்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் #தில்லை திரும்பினர்.

தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, #தில்லைவாழ்_அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் #அம்பலப்_புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.

இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.

இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.

பின்னர் பல நூறு #தில்லைவாழ்_அந்தணர்கள்அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை #நடராஜரையும்#சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து #தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.

வரும் வழியில் #திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் #சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு #வைத்தீஸ்வரன்கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.

1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா #கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.

– Dinamani

————
இது முற்றிலும் உண்மை. முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர். தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர். கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது.

Thillai Sthalam 

Thillai Kural 

Senguttuvan Murugaiyan

Scroll to Top